தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பாபநாசம் அருகே 65 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்த 45 வயது உடைய காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் வைரக்கண்ணு என்பவருடைய மனைவி பக்கிரி அம்மாள் (65) வசித்து வருகின்றார்.
கணவர் இறந்து விட்ட நிலையில் இவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் திருப்பூரில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மருமகள் சுகந்தி தனது தாய் வீட்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். இதனிடையே பக்கிரி அம்மாள் தன்னுடைய வீட்டில் அய்யம்பேட்டை பகுதிக்கு நடந்து சென்ற கூடு வேலை செய்துவிட்டு மீண்டும் நடந்தே வீட்டுக்கு வருவது வழக்கம்.
அதன்படி வழக்கம்போல பக்கிரி அம்மாள் குறுக்கணை உள்ளிக்கடை ரோடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அதே வழியாக குடிபோதையில் வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மும்மூர்த்தி (46) என்ற நபர் மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டி வீட்டுக்கு சென்று தகவல் கூறவே அவருடைய மருமகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். பிறகு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் மும்மூர்த்தியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
