1 மணிக்கு மேல்தான் தூங்குறீங்களா…? உங்க உடலுக்கு இவ்வளவு ஆபத்து காத்திருக்கு…!! உஷாரா இருங்க…!!

By Devi Ramu on மார்கழி 30, 2025

Spread the love

இன்றைய டிஜிட்டல் உலகில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்குவது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இது ஹார்மோன் சமநிலை, உடல் எடை, இரத்த சர்க்கரை அளவு மற்றும் மனநலம் ஆகியவற்றில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் சிங் தாக்கூர் எச்சரிக்கிறார்.

இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலான நேரமே உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் பொற்காலமாகும். இந்த நேரத்தில் விழித்திருப்பது மூளையின் செயல்பாட்டைக் குறைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனமாக்கும். குறிப்பாக, நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுரக்கும் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களின் (HGH) செயல்பாடு தடைபடுவதால் உடல் பருமன் உள்ளிட்ட சிக்கல்கள் உண்டாகும்.

   

ஆரோக்கியமான வாழ்விற்கு இரவு 11 மணிக்குள் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என மருத்துவ ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. தூக்கமின்மை இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய அறிவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனைத் தவிர்க்க, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் உள்ளிட்ட திரை சாதனங்களைத் தவிர்ப்பதுடன், மாலை 4 மணிக்கு மேல் காஃபின் கலந்த பானங்களைக் குடிப்பதை நிறுத்த வேண்டும்.

   

உணவில் மெக்னீசியம் நிறைந்த வாழைப்பழம், நட்ஸ் மற்றும் கீரைகளைச் சேர்த்துக் கொள்வது ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும். உடலின் ஆரோக்கியம் என்பது நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதில் மட்டுமல்ல, எப்போது தூங்குகிறீர்கள் என்பதில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.