Categories: சினிமா

பாழடைந்த வீடு, கால் நீட்டி படுக்க கூட முடியல.. பரிதாப நிலையில் களவாணி பட நடிகை..!

Spread the love

தமிழில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த படம் களவாணி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நல்ல தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இந்த படத்தின் முலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். முதலில் இவர் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் சினிமாவில் நடித்து கொண்டே தன் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்து இருந்தார்.

இந்நிலையில் களவாணி படத்தில் விமலின் தங்கையாக நடித்த மனிஷா பிரியதர்ஷினி சமீபத்தில் அளித்த பேட்டியில்,  சென்னையில் இருந்து எங்க வீட்டுக்கு வரதுக்கு பைக்ல வந்தா கூட சுமார் ஒன்றரை மணி நேரம் டிராவல் பண்ண வேண்டி இருக்கும். ரொம்ப சின்ன வீட்ல தான் இத்தனை நாளா நாங்க இருந்துட்டு இருக்கோம். இதற்கு முன்பு ரொம்ப அமைதியாக இருக்கக்கூடிய ஒரு வீட்டில் இருந்தோம். ஆனா அங்க இருந்து எங்க பாட்டி பேச்சைக் கேட்டு தற்போது ஒரு வீட்டுக்கு வந்து வாழ்ந்துட்டு இருக்கும். சின்னதா ஒரு ஹால் மற்றும் கிச்சன் மட்டும் தான் இருக்கு. கட்டில் இருந்தும் அதை போட்டு படுத்து தூங்க கூட இடமில்லை.

பேன் கூட சரியா ஓடாது. நைட் ஆனா கொசு தொல்லையும் அதிகமா இருக்கும். மழை நேரத்துல பக்கத்து பில்டிங் எங்க வீட்டை ஒட்டி கட்டி இருப்பதால் நீர்வீழ்ச்சி மாதிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். எத்தனையோ பேர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கோ நான் வீடு கட்டி தரேன் என்று சொல்லி இருக்காங்க. ஆனா அப்படி பண்ணி தான் எனக்கு வாழ வேண்டும் என்று அவசியமில்லை. சினிமாவுல நடிச்சிட்டா நல்லா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்பாங்க என்று நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் கிடையாது. எங்க அம்மா சிங்கிள் மதரா இருந்து தான் என்ன வளர்த்தாங்க.

இன்னைக்கு வரைக்கும் நானும் எங்க அம்மாவும் தனியா இருப்பதால் பலரும் எங்கள அவ்வளவு இளக்காரமா பார்க்கிறாங்க. என்னோட இன்டர்வியூ அல்லது படம் ஏதாவது டிவில வந்தா எங்க அம்மா ஆசையா பார்க்கலாம்னு நினைக்கும் போது எங்க வீட்டு லைன் மட்டும் கட் பண்ணி விட்டுருவாங்க. ஒரு பொண்ணா நிறைய சவால்களை இன்னைக்கு வரைக்கும் சந்திச்சு கிட்ட தான் இருக்கோம். இன்னைக்கு நிலைமைக்கு ஒரு 15 ஆயிரம் காசு இருந்தா நாங்க ஏற்கனவே இருந்த பழைய வீட்ட சரி பண்ணி மீண்டும் ஒரு நல்ல வீட்ல நாங்க வாழ்வோம். அதற்குக் கூட வழியில்லாமல் தான் இன்னைக்கு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும் என்று மனிஷா பிரியதர்ஷினி எமோஷனலாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

5 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

12 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

21 minutes ago

“CM விஜய் சொன்ன ‘தூய சக்தி’ அரசியல் இதுதானா…?” – சொந்தக் கட்சியிலேயே வசூல் வேட்டை..?! கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன் அதிர்ச்சி குற்றச்சாட்டு…!!

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…

27 minutes ago

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

10 மணத்தியாலங்கள் ago