தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனைகளுடன் திரைப்படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் எம் ஆர் ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில் காமெடி, குணச்சித்திரம், ஹீரோ மற்றும் வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர். அதே சமயம் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் இவ்வாறு திகழ்ந்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் இவர் நடித்துள்ளார். எம் ஆர் ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதும் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை. பிரபல பட தயாரிப்பாளரான SM உமர் சினிமா கலைஞர்கள் பலரோடு மிக நெருக்கமான நட்பில் இருந்தவர்.
அவருடைய நட்பு வளையத்தில் இருந்த ஒருவர் தான் எம் ஆர் ராதா. இதனிடையே எம் ஆர் ராதாவின் நாடகமன்றை தனது சொந்த ஊரான காரைக்காலில் நடத்தலாம் என்று முடிவு செய்த எஸ் எம் உமர், நம்ம ஊரில் ஒரு நாடகம் நடத்துங்க என்று கேட்க எம் ஆர் ராதா தேவசுவரம் போராட்டம் என்ற நாடகத்தை உங்கள் ஊரில் நடத்துகிறேன் எனக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுங்க என்று கேட்டுள்ளார். உடனே போராட்டத்திற்கான போஸ்டர்கள் எல்லாம் ஊர் முழுக்க ஒட்டப்பட்ட நிலையில் போலீஸ் உமரை தேடி வந்தது. இந்தப் போராட்டத்தை இங்கு நடத்தக்கூடாது மக்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் தலைப்பிலே ஒரு ஆக்ரோஷமான போராட்டம் குறித்த செய்தி உள்ளதால் இதை நடத்தக் கூடாது என்று கண்டிக்க உடனே உமர் எம் ஆர் ராதாவிடம் சென்று இந்த ஊரில் இது நடத்தினால் நமக்கு ஆபத்தாக வந்துவிடும் நீங்கள் வேறு நாடகத்தை நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.
உடனே எம் ஆர் ராதா லட்சுமிபதி நாடகத்தை அங்கு நடத்துவதாக கூறிய நிலையில் ஏற்கனவே அங்கு அந்த நாடகம் பலமுறை போடப்பட்டதால் கூட்டம் எதுவும் அவ்வளவு வரவில்லை. இருந்தாலும் லட்சுமிபதி நாடகத்தை இரண்டு காட்சிகள் எடுத்த பிறகு இறுதியாக தான் நடத்துவதாக திட்டமிட்டு இருந்த தேவாசுவரம் போராட்டம் காட்சிகளை உள்ளே கொண்டு வந்தார் எம் ஆர் ராதா. உடனே பதறிப்போன உமாறு எதற்கு இந்த வேலை என்று கேட்க அங்கிருந்த போலீஸ்காரர்கள் நமக்கும் இதற்கும் சம்மதம் இருப்பதாக தெரிய வேண்டாம் இங்கிருந்து நாம் கிளம்பி விடுவோம் என்று அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
பிறகு நாடகம் முடிவடைந்ததும் மொத்த கலெக்சன் 200 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. எம் ஆர் ராதாவுக்கு 500 ரூபாய் சம்பளம் பேசியிருந்த நேரத்தில் உமர் வசூல் வெறும் ₹200 தான் வந்தது என்று கூற எனக்கு இதுவே போதும் அதை கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டு அங்கிருந்து எம் ஆர் ராதா கிளம்பிவிட்டார். பொதுவாகவே வீம்புக்கு எம் ஆர் ராதா என்ன வேணாலும் செய்வார் என்ற ஒரு பிம்பம் இருக்கும் நிலையில் நேர்மையாக நடக்கக்கூடிய மனிதர் எம்ஆர் ராதா என்பதற்கு இந்த சம்பவம் தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…