ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளிவந்த திரைப்படம் தான் சின்ன கவுண்டர். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம். விஜயகாந்த் சின்ன கவுண்டர் தவசியாகவும் மனோரமா அவரின் அம்மாவாகவும், சுகன்யா தெய்வானை ஆகவும் நடித்திருந்த நிலையில் இவர்களோடு கவுண்டமணி, வடிவேலு, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்தான். படம் ஆரம்பிக்கும் போதே கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே பாடல் நம்மை வசப்படுத்தி விடவும். எஸ் பி பி மற்றும் சுசிலா குரலில் முத்துமணி மாலை அவ்வளவு இடம் தரும்.
அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே பாடல் விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அப்படியே பொருந்தும். கூண்டுக்குள்ள உன்ன வச்சு பாடலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டது. படம் எப்படி எவர்கிரீன் மூவியாக பார்க்கப்படுகின்றதோ அதனைப் போல தான் பாடல் அனைத்தும் எவர்கிரீன் என்று சொல்லும் அளவுக்கு அமைந்தது. ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற முத்துமணி மாலை பாடல் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. அதாவது படத்திய இயக்குனர் ஆர் வி உதயகுமார் இளையராஜாவிடம் சின்ன கவுண்டர் படத்திற்கான கதையை சொல்லிவிட்டு ஒரு பாடலை கம்போஸ் செய்து வைத்திருக்கிறார்.
ஆனால் அந்த பாடல் ஆர்வி உதயகுமாருக்கு பிடிக்கவில்லை. இந்தப் பாடல் தன்னுடைய படத்திற்கு செட் ஆகாது அதனால் நீங்கள் வேறு ஒரு பாடலை கம்போஸ் செய்து கொடுங்கள் என்று ஆர்வி உதயகுமார் இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த இளையராஜா இந்த பாட்டுக்கு என்னையா குறைச்சல் என்று கேட்டுள்ளார். என் படத்துக்கு இந்த பாடல் சரிவராது. மணிரத்னம் படத்திற்கு எழுதுவதை போல என்னுடைய படத்துக்கு எழுத வேண்டாம். கிராமத்து சாயலில் முத்துமணி பாசுமணி என வருவது போல எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்ற ஆர்வி உதயகுமார் கேட்டுள்ளார்.
உடனே இளையராஜா ஆர்மோனியப் பெட்டியை சட்டென இழுத்து முத்து மணி மாலை என பாடி டியூன் போட அவர் டியூன் வாசிக்க வாசிக்க ஆர்வி உதயகுமார் வரிகள் எழுத உருவான பாடல் தான் முத்து மணி மாலை என்ற பாடல். ஐந்து நிமிடத்தில் கம்போசிங் செய்து 15 நிமிடத்தில் பாடல்களை எழுதி உருவான பாடல் தான் இந்த முத்துமணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட. இந்த பாடல் உருவான தகவலை ஆர்வி உதயகுமார் ஒரு நிகழ்ச்சியில் அவரே தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…