அடி ஆத்தி..! எலான் மஸ்கின் சம்பளம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்… தலை சுற்றவைக்கும் செய்தி..!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்குக்கு வழங்கப்படவுள்ள சம்பள  தொகுப்பு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. இவர் தனக்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க வேண்டுமென டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிலான இந்த சம்பளமானது  இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் கோடி ஆகும். இந்த பிரம்மாண்டமான தொகையானது பல சிறு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) விட அதிகமானது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை   ஒப்பிடும்பொழுது, இது 2.38 மடங்கு அதிகமானது என்று சொல்லப்படுகிறது.