பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

தமிழகத்தில் முறையாக பள்ளிக்கு வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்க ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் தேர்ச்சி பெற முடியாதோ? என நினைக்கும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் பத்து நாளை முதல் பள்ளிகளில் அதற்கான பணி தொடங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.