“ஐயோ, என் புள்ளைய காணோம்”… திடீரென காணாமல் போன ஒன்றரை வயது குழந்தையை தேடிய தாய்… வீட்டின் அருகே காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

கும்மிடிப்பூண்டி அருகே விளையாடிக் கொண்டு இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான சேதுவின் மனைவி இன்று வழக்கம் போல வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது இந்த தம்பதிகளின் ஒன்றரை வயது பெண் குழந்தை தர்ஷினி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டில் வேலைகளை கவனித்து வந்த பெட்ரோல் சிறிது நேரத்தில் குழந்தை காணாமல் போனால் அங்கும் இங்கும் தேடினர். அப்போது வீட்டின் அருகே இருந்த குளத்தில் குழந்தை தவறி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது