மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற ‘சோமண்ணா’ என்ற யானை திடீரெனப் பாதையை மாற்றி ஓடியதால் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சிவப்ப நாயக்க அரண்மனை அருகே தொடங்கிய ஊர்வலம் கோட்டைச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, சோமண்ணா திடீரெனத் திரும்பி ஓடியது. இதனால், சுமார் 450 கிலோ எடையுள்ள வெள்ளி அமாரி கீழே விழுந்து லேசான சேதமடைந்தது. யானை திடீரென ஓடியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் அலறி அடித்து ஓடியதில் 2 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

   

உடனடியாகத் துறையின் வனத்துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி கோட்டை சீதாரமாஞ்சநேய கோவில் அருகே அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடக்கத்தில் மற்றொரு யானை தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் சோமண்ணா மாற்றப்பட்டு முதல்முறையாக அமாரி சுமத்தப்பட்டதே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், நகர்ப்பகுதிகளில் இது போன்ற யானை ஊர்வலங்கள் நடத்துவது குறித்து சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.