6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், பக்கத்து வீட்டுச் சிறுவன் குழந்தையைக் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் காவல்துறையினர் இது விபத்து என்று வழக்குப்பதிவு செய்திருந்தாலும், குழந்தையின் தாயார் தொடர்ந்து வலியுறுத்திய தீவிர விசாரணையின் மூலமே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அண்டை வீட்டுச் சிறுவன் குழந்தையைத் தூக்கிச் சென்று டக்டில் வீசியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
