“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகைக் கொண்டாட்டக் கூட்டத்தின் நடுவே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியே பொதுவெளியில் துப்பாக்கியைப் பயன்படுத்தி வானத்தை நோக்கிச் சுட்டது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. விழாத் தளத்தில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்களும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.