குஷியோ குஷி..! இனி மின்கட்டணம் அபராதம் கிடையாது… தமிழக அரசின் புதிய வசதி அறிமுகம்..!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதிக்காக “EB Auto Pay” என்ற புதிய தானியங்கி மின் கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org பக்கத்திற்குச் செல்ல வேண்டும் . அங்கு “EB Auto Pay” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, தங்களது மின் இணைப்பு எண், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது GPay போன்ற UPI ஐடி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

இச்சேவையில் வெற்றிகரமாகப் பதிவு செய்த பிறகு, ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வு கணக்கிடப்படும் பத்தாவது நாளில் உங்களுக்கான மின்கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படும் . இதன் மூலம் நுகர்வோர் மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் செல்வதோ அல்லது இறுதித் தேதியை நினைவில் வைத்து ஆன்லைனில் செலுத்துவதோ தேவையற்றதாகிறது . இந்தத் தானியங்கிப் பிடித்தம் முறை, பயனர்கள் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வதால், தாமதக் கட்டணம் மற்றும் அபராதங்கள் விதிப்பதைத் தவித்திட பெரிதும் உதவுகிறது.