“கண் முன்னாடியே அம்மாவை”… கதறிய 4 குழந்தைகள்…. விடியற்காலை 5 மணிக்கு வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…. திருவனந்தபுரத்தில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் நள்ளிரவு கொடூரம்…!

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பிள்ளைகளின் கண் முன்னாடியே கணவன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த 46 வயதான எலக்ட்ரீசியன் சுரேஷ் மற்றும் மன்னாந்தலையைச் சேர்ந்த 36 வயதான ஹசீனா பீவி ஆகிய தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக நாலாஞ்சிரா பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், தம்பதிக்கு இடையே கடந்த சில காலமாகவே கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தத் தொடர் சண்டைகளுக்கு கணவன் சுரேஷுக்கு தன் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட தீராத சந்தேகமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஹசீனா பீவி, கடந்த வாரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவர் வந்ததில் இருந்தே தம்பதிக்குள் மோதல் இன்னும் அதிகமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. சண்டை முற்றிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹசீனா பீவி தன் கணவனுக்கு எதிராக மன்னாந்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கவுன்சிலிங் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் கொடுத்த அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் சுரேஷ் இல்லை. மாறாக, தன் மீது போலீசில் புகார் அளித்ததால் அவர் இன்னும் கடுமையான ஆத்திரமடைந்துள்ளார். வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே தம்பதியினருக்கு இடையே விடிய விடிய வாக்குவாதம் நீடித்தது. நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியபோது, கணவன்-மனைவி கத்தும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த அவர்களின் 4 குழந்தைகளும் பயந்து கண் விழித்தனர். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுரேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தன் பிள்ளைகள் அலறித் துடித்த கண் முன்னாடியே மனைவி ஹசீனா பீவியின் கழுத்தை கொடூரமாக அறுத்தார்.

இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத ஹசீனா பீவி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியைக் கொன்ற பிறகும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல், சுரேஷ் மிகக் கொடூரமாக அந்தக் கொலைக் கத்தியை வாஷ்பேசினில் கழுவி சுத்தம் செய்துள்ளார். பின்னர் பாத்ரூமுக்கு சென்று தன் கைகளையும் சுத்தம் செய்துவிட்டு, அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். பெற்ற தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த குழந்தைகளில், மூத்த மகள் உடனடியாக மன்னாந்தலை போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் படுக்கையறையில் கிடந்த ஹசீனா பீவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயை இழந்து, தந்தையின் இந்த கோர முகத்தைக் கண்டு மிரண்டு போய் நிற்கும் 4 குழந்தைகளையும் போலீசார் தற்போது தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொடூர கணவன் சுரேஷைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

மேயர் பிரியா செய்த சதி… குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்… உண்மையை உடைத்த TVK பெண் எம்எல்ஏ..!!

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…

3 minutes ago

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

28 minutes ago

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

38 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

45 minutes ago

அமித் ஷா பேச்சை தட்டிய அண்ணாமலை.. டெல்லியில் ரகசிய மூவ்… ஆர்வக்கோளாறில் போஸ்டர் அடிக்கும் ஆதரவாளர்கள்..!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…

49 minutes ago

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

57 minutes ago