மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் இரண்டு சுவர்களுக்கு இடையே இருந்த ஒரு அடிக்கும் குறைவான குறுகிய இடுக்குச் சந்தில் தவறி விழுந்து சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவருக்குள் மாட்டி நகர்வதற்குக் கூட முடியாமல் தவித்த முதியவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், முதியவரை மீட்கத் திட்டமிட்டு ஒரு பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்தினர். சுமார் இரண்டு மணி நேர தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த முதியவர் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட முதியவர் லேசான காயங்கள் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீயணைப்புத் துறையினரின் இந்தச் சுதாரிப்பான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
