கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பகுதியில் 69 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் தன்னுடைய மனைவியோடு வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்கள். கடந்த பத்தாம் தேதியன்று மருத்துவரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தொலைதொடர்பு துறையிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார் . உங்களுக்கு பண மோசடிகள் தொடர்பாக பிரச்சினை உள்ளது என்று கூறிய அவர் இது குறித்து சிபிஐ அதிகாரி உங்களிடம் போனில் விசாரிப்பார் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீஸ் டிரெஸ்ஸில் இணைந்த நபர் ஒருவர் வீடியோ காலில் இந்த டாக்டர் தம்பதியிடம் பேசி உள்ளார்.
அப்போது பணமோசடி செய்ததாக கூறி அவர்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் சிலவற்றை தெளிவற்ற முறையில் காட்டியுள்ளார். இதை உண்மை என்று நம்பி அந்த தம்பதி எப்போதும் வீடியோ அழைப்பிலேயே இருந்துள்ளார்கள். இதனை அடுத்து கடந்த 12ம் தேதி அன்று பணமோசடி விசாரணையில் நடப்பதாக கூறிய அந்த கும்பல் நீதிபதி கோர்ட்டுக்கு வருவதாக கூறி எழுந்து நிற்குமாறு அந்த தம்பதியை மிரட்டி இருக்கிறது. மேலும் வங்கி கணக்குகளை சோதனையிட வேண்டும் என்று நீதிபதி சொன்னதும் தம்பதிகள் வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடி கும்பல் சொன்ன வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளார்கள்.
இப்படி 11 நாட்கள் அந்த தம்பதி டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அப்போது 240 கோடி ரூபாயை தம்பதி கணக்கிலிருந்து மோசடி கும்பல் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளது. அதன் பிறகு டாக்டர் வீட்டிற்கு வந்த உறவினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி என்று சொன்ன பிறகுதான் காசர்கோடு சைபர் பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்கள். இதனை அடுத்து பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
