“நீ பற்ற வைத்த நெருப்பொன்று…” அன்று காயம்பட்ட போராளி… இன்று அதே சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்… மோடி எடுக்க போகும் அதிரடி முடிவு… சூடு பிடிக்கும் நீட் சர்ச்சை…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

வாழ்க்கை ஒரே புள்ளியில் தொடங்கி, அதே புள்ளியில் மீண்டும் வந்து நிற்கும் என்பதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்போதைய சிறந்த உதாரணமாக மாறியுள்ளார். 1997-ஆம் ஆண்டு ஒடிசாவில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில தலைவராக இருந்தபோது, அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக வினாத்தாள் கசிவு சம்பவத்தைக் கண்டித்து சுமார் 1,500 மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். காவல்துறையின் கடுமையான தடியடியில் எலும்பு முறிவு வரை காயமடைந்து, செய்தித் தாள்களின் முகப்புப் பக்கங்களில் இடம் பெற்ற அந்த மாணவர் போராட்டமே, அவரது அரசியல் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்து அவரை மத்திய அமைச்சர் பதவி வரை உயர்த்தியது.

ஆனால், எந்த வினாத்தாள் கசிவு போராட்டத்தால் அவர் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு அரசியல் உச்சத்தை தொட்டாரோ, அதே வினாத்தாள் கசிவு விவகாரம் இன்று அவரை நிலைகுலைய வைத்துள்ளது. தற்போது நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு மாணவர் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் டெல்லியில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அன்று போராட்டக் களத்தில் மாணவர்களுக்காகக் குரல் கொடுத்தவர், இன்று அதே மாணவர் சமூகத்தின் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகியுள்ளார்.

   

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகனான இவர், பெட்ரோலியத் துறையில் உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி நீண்ட காலம் அமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றவர். 2021 முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் பிரதான் மீது தொடர்ந்து அழுத்தம் அதிகரித்த போதிலும், நீட் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் இவர் மீது மட்டும் தவறு சுமத்த முடியாது என அரசுத் தரப்பு நம்புவதால் அவர் பதவியில் தொடரவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், “நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்” என்பதற்கு ஏற்ப, 1997-ன் போராட்ட நாயகன் இன்று அதே போராட்டத்தால் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் சூழல் உருவாகியுள்ளது.