ஷாக்… நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக… தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?… தலைநகரை அதிரவைக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்…!

By Swetha on ஆடி 24, 2026

Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியினரும் கல்லூரி மாணவர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போ போராட்டத்தைக் கலைக்க காவல்துறை மூலம் தாக்குதல், கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் தன் கண்பார்வையை இழந்தபோதிலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமைச்சரின் ராஜினாமாவில் உறுதியாக இருக்கும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்தது. டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு வளாகத்தில், ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் கரப்பான் பூச்சி ஜனதா தளப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போதும் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் கோரிக்கையே பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

   

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கரப்பான் பூச்சி ஜனதா தள நிர்வாகிகள், கல்வி அமைச்சரின் ராஜினாமா விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். இக்கோரிக்கை குறித்து முடிவெடுக்கவும் விவாதிக்கவும் மத்திய அரசு தரப்பில் நாளை வரை அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்பதை உறுதிபடக் கூறியுள்ளனர்.