திமுக மேலிடத்தால் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மாற்றுக்கட்சிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அழகிரியின் மகள் கயல்விழி தவெகவின் பக்கம் கவனம் செலுத்தினார். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதுடன், தலைமைச் செயலகம் சென்று முதல்வர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். இதனால், கயல்விழி விரைவில் தவெகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
எனினும், கட்சியில் இணைவதற்கு முன்பாக மதுரை மாநகராட்சி மேயர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்ற பெரிய நிபந்தனையை கயல்விழி முன்வைத்தார். திமுக குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாரிசு கட்சியில் இணைவது தவெகவிற்கு பலம் சேர்க்கும் எனத் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், இப்படி முன் நிபந்தனையாகப் பதவி கேட்பதை கட்சியின் தலைமை முற்றிலும் விரும்பவில்லை. இந்த விவகாரம் உடனடியாகக் கட்சியின் தலைவர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்த தொண்டர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பதவிக்காக வருபவர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக கயல்விழியுடனான பேச்சுவார்த்தைகள் பாதியிலேயே கைவிடப்பட்டதால், தவெக தலைமையின் இந்த முடிவால் மு.க.அழகிரி தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
