அதிமுகவுக்கு செக்… பாஜக எடுத்த திடீர் முடிவு… செம ஷாக்கில் எடப்பாடி… கூட்டணியில் வெடித்த பூகம்பம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.

என்னதான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் கூட்டணிக்குள் தொடர்ந்து சில முரண்பாடுகள் நிலவி வருகிறது. இதனிடையே கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இந்நிலையில் அதிமுகவிடம் 53 தொகுதிகளை கேட்க பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் கொளத்தூர், தி நகர், கோவை மேற்கு, தொண்டாமுத்தூர், ஸ்ரீரங்கம், போடி, தென்காசி, குன்னூர், குளித்தலை, கிள்ளியூர் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கும். 2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த சட்டமன்ற தொகுதிகளை கணக்கிட்டு இது தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதைப் பார்த்து இபிஎஸ் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.