பிரேசில் நாட்டில் வீசிய கடும்புயலால் 400 விமானங்கள் ரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய 13 லட்சம் வீடுகள் – இருட்டில் தவித்த மக்கள்!

By Elango on மார்கழி 14, 2025

Spread the love

பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ மாகாணத்தில் வெப்பமண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள் மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் சுமார் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கித் தவித்தன. இதனால் பல லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை அந்த மாகாணத்தில் முடங்கியது. அதேபோல் புயல் காரணமாக வானில் விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே 400 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் பயணம் தடைபட்டதால் அவதிப்பட்டனர்.