இந்திய தபால் துறையில் பொதுமக்களுக்கான பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதிலும் தொடர் சேமிப்பு திட்டம் அல்லது நீண்ட கால சேமிப்பு திட்டம் சாமானிய மக்களுக்கு மிகவும் உதவுகிறது. இதில் தொடர் சேமிப்பு திட்டம் மூலம் 5 ஆண்டுகளில் முடிவில் 2.15 லட்சம் ரூபாய்க்கு மேல் முதிர்வு தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தபால் துறையின் தொடர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து தினமும் 100 ரூபாய் சேமித்துக் கொண்டே வந்தால், மாதம் 3000 ரூபாய் வரும்.
இதுவே 5 ஆண்டுகளில் மொத்த முதலீடாக 1.80 லட்சம் ரூபாயாக சேர்ந்து விடும். இதற்கு வட்டியாக மட்டுமே 32,972 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 2,12,972 ரூபாய் முதிர்வுத்தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் வருடாந்திர வட்டி விகிதம் 6.7 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாதம் ஒருமுறை பணம் செலுத்தும் வகையில் உள்ளது. இதில் தினமும் பணம் செலுத்தும் வசதி கிடையாது. இதுபோன்ற பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்று விவரங்களை பெறலாம்.
