அவசரப்படாதீங்க..! பொறுமையா இருங்க… நாளை காலை முக்கிய முடிவை அறிவிப்பேன்… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க வாய்ப்பு இருந்தாலும் ஓபிஎஸ்சை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து  ஓபிஎஸ் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நாளை காலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள் என்று கூறியுள்ளார். ஓபிஎஸ் தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி அமைத்தால் அதிமுக – பாஜக வெற்றியை கணிசமாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.