பணி நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவர்… ஒரு உயிரே போயிடுச்சே…. கதறும் நோயாளியின் உறவினர்கள்..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மருத்துவமனையில் வேலை நேரத்தில் மருத்துவர் மேசை மீது கால்களை வைத்துக்கொண்டு அலட்சியமாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் காயம் அடைந்த ஒரு நோயாளி அருகில் அவருக்கு அருகில் இருந்ததை கவனிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த காயம் அடைந்த நபர் உயிரிழந்துள்ளார் .விபத்து காயங்களோடு வந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும்,. அவரை எழுப்பியும் அவர் எழும்பவில்லை என்றும் இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளி உயிரிழந்ததாகவும் நோயாளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.