அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் பெரும்பாலானவை திமுகவுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருப்பது தமிழக பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “கூட்டணி தர்மம் என்பது இரு கட்சிகளும் பரஸ்பரம் பலமடைந்து வெற்றி பெறுவதாக இருக்க வேண்டும்; ஆனால் இங்கு பாஜக பலவீனப்படும் சூழல் நிலவுகிறது” என கமலாலய வட்டாரத்தில் குமுறல்கள் வெடித்துள்ளன. இது தொடர்பாக பியூஷ் கோயல் மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகியோரிடம் புகார்கள் குவிந்து வரும் நிலையில், தொகுதிகளை மாற்றி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த சலசலப்புகளுக்கு மத்தியில், தொகுதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை டெல்லி மேலிடம் தன் வசம் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மிகச் சாதுர்யமாகத் தன் பக்கம் திருப்பியுள்ளார். தேர்தல் செலவுகளை பாஜக ஏற்க வேண்டும் என இபிஎஸ் கோரிக்கை வைத்தபோது, “கூட்டணிக்கு நீங்கள்தான் தலைமை என்பதால், செலவுகளையும் நீங்களே கவனியுங்கள்” என அமித் ஷா கூறியுள்ளார். இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி, செலவுகளைத் தாங்களே ஏற்றுக் கொள்வதாகக் கூறி, தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவின் முழு அதிகாரத்தையும் நிலைநாட்டியுள்ளார்.
பாஜக வேட்பாளர்களுக்கான தேர்தல் பட்ஜெட்டைத் தங்கள் தரப்பிடம் ஒப்படைக்குமாறு அமித் ஷா கோரியபோதும், அதனை இபிஎஸ் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. “தமிழக பாஜகவினர் மீது போதிய நம்பிக்கை இல்லை; கடந்த கால அனுபவங்கள் கசப்பானவை” என்று வெளிப்படையாகவே விளக்கிய அவர், கூட்டணித் தலைமை என்ற அடிப்படையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளைத் தானே முடிவு செய்து முடித்துள்ளார். இதன் மூலம் நூறு தொகுதிகளில் தனது ஆதரவாளர்களைக் களமிறக்க வேண்டும் என்ற தனது நீண்டகாலத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளதாக அதிமுக சீனியர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது ‘ஒன் மேன் ஆர்மி’யாக நின்று தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ள எடப்பாடி, அடுத்தக்கட்டமாக தேர்தல் களத்தில் பாஜகவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதிலும் ரகசிய வியூகம் வைத்துள்ளாராம். அமித் ஷா கூறிய “கூட்டணிக்கு நீங்கள்தான் தலைமை” என்ற ஒற்றை வார்த்தையை ஆயுதமாக வைத்து, டெல்லியின் அழுத்தத்தைச் சமாளித்து தமிழக அரசியலில் தனது பிடியை அவர் பலப்படுத்தியிருக்கிறார். இனி தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் களமிறங்கிய பிறகு, செலவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து இறுதி முடிவுகளை எடுக்கலாம் எனத் தனது ஆதரவாளர்களிடம் அவர் தெரிவித்து வருவதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…