விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூர் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ‘அன்பகம்’ கட்டடத் திறப்பு விழாவில், முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு ஆற்றிய ஆவேச உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி வாயிலாக இந்த மையத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பொன்முடி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் உரையாற்றிய பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். “டெல்லியில் உள்ள பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி ‘காவடி’ தூக்கிக் கொண்டிருக்கிறார்” என்று சாடிய அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு உருப்படியான எந்தத் திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். எடப்பாடியின் செயல்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் அமைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் திராவிட மாடல் ஆட்சி குறித்துப் பேசிய பொன்முடி, தமிழகத்தைப் பெண் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, ‘பெண் உரிமை மாநிலமாக’ முதல்வர் மாற்றி வருவதாகத் தெரிவித்தார். முன்பெல்லாம் பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட நிலை இருந்ததாகவும், ஆனால் இன்று பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முதல்வர் 5,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி “எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டார். சாதி, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இன்று ஒட்டுமொத்த இந்தியாவே தமிழகத்தின் வளர்ச்சியை வியந்து பார்ப்பதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் திரளானோர் கலந்து கொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நர்பத்கேடா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும், தேவன்ஷ் என்ற இளைஞரும்…
பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய…
ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள்…
கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை…
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்…