உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நர்பத்கேடா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும், தேவன்ஷ் என்ற இளைஞரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலை படிப்பைத் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, அந்த மாணவி சக ஆண் நண்பர்களிடம் சகஜமாகப் பேசுவதை விரும்பாத தேவன்ஷ், அதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், அந்த மாணவி தேவன்ஷுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.
தன்னை விட்டு விலகிய மாணவியை மீண்டும் தன்னிடம் பேச வைப்பதற்காக தேவன்ஷ் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, மாணவியின் பெற்றோர் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். மேலும், மாணவியின் தங்கையும் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்த நேரத்தில், அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த தேவன்ஷ் அங்கு அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவன்ஷ், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் எந்தவித பதற்றமுமின்றி, சடலத்தின் அருகிலேயே அமர்ந்து தனது செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய மாணவியின் தங்கை, தனது அக்கா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், அருகில் தேவன்ஷ் கத்தியுடன் அமர்ந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளியான தேவன்ஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒருதலைப்பட்சமான கோபத்தால் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…
மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம், கரோத் தாலுகாவில் உள்ள லுக்கா கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல்…
தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதி நிலவரம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு மாநில…
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மதுக்கடை ஒன்றிற்குள் நுழைந்து, மது அருந்தி மயங்கி விழுந்த ரக்கூன் விலங்கு, உள்ளூர் விலங்குகள்…