சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய 5 இடங்களில் இந்தச் சோதனையானது ஒரே நேரத்தில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் பிரபல பைனான்சியர் ஒருவரைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, அந்த பைனான்சியரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர ஆவண சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று, அதை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற…
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கும், அதனைச் சட்டைப் பையில் வைத்திருப்பதற்கும் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடியாகத்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள்…
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு (EPS) தனது முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு…
இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் (Elstree and Borehamwood) நகர சபையின் புதிய மேயராக 23 வயதான துஷார் குமார்…