நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால், இளைஞர்கள் உட்பட பலருக்கும் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், நாம் அன்றாட உணவில் சில ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பச்சை இலைக் காய்கறிகளான கீரை, காலே, புரோக்கோலி, புதினா, கொத்தமல்லி முதன்மையானவை. இவற்றில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இது தவிர, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த கேரட், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால்/தயிர் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
அதேபோல, சால்மன் போன்ற மீன்கள், பருப்பு வகைகள் மற்றும் சுண்டல் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம். நட்ஸ் வகைகள் மற்றும் ஆலிவ், சூரியகாந்தி எண்ணெய்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். மறுபுறம், அதிக உப்பு (சோடியம்), கொழுப்பு நிறைந்த துரித உணவுகள், பொரித்த உணவுகள், சர்க்கரை, செயற்கை குளிர்பானங்கள் மற்றும் மது, புகைப்பழக்கம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மஞ்சள், இஞ்சி, சீரகம் போன்ற இயற்கையான பொருட்களை உணவில் அதிகம் சேர்ப்பது ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…