எங்க வீட்டு மகாராணிக்கு காது குத்தி மொட்டையடிச்சாச்சி…. விஜய் டிவி புகழ் போட்ட சந்தோஷமான பதிவு…!

By Soundarya on கார்த்திகை 10, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

   

தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இதற்கிடையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை ஐந்து வருடமாக காதலித்து வந்தார்.

   

 

இதனையடுத்து  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தில் பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக அசத்தி வருகிறார்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தன்னுடைய மகள் ரிதன்யாவிற்கு கோவிலில் வைத்து மொட்டையடித்துள்ளார். இந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் புகழ். அதில் எங்க வீட்டு மகாராணிக்கு காத்து குத்தி மொட்டையடிச்சாச்சு என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pugazh (@pugazhoffl_)