4 வருஷமா படுத்த படுக்கையா இருக்கும் அம்மா.. மிகப்பெரிய தியாகம் செய்த அப்பா.. எமோஷனலாக பதிவு போட்ட சத்யராஜ் மகள்..!!

By Nanthini on கார்த்திகை 10, 2024

Spread the love

பிரபல நடிகரான சத்யராஜ் வேதம் புதிது திரைப்படத்தில் நடித்து திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு வால்டர் வெற்றிவேல், மலபார் போலீஸ், குங்குமப்பொட்டு கவுண்டர், வில்லாதி வில்லன், நண்பன், சின்னத்தம்பி பெரியதம்பி, குரு சிஷ்யன், கோவை பிரதர்ஸ், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா மகிழ்மதி என்ற இயக்கம் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

HBD Sathyaraj: 'சிவாஜி'யின் நிறைவேறாத ஆசை... திரையில் வாழ்ந்து காட்டிய சத்யராஜ்! | Actor sathyaraj birthday special article - kamadenu tamil

   

இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா இன்ஸ்டாகில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், சிங்கிள் பெற்றோர் உள்ள அனைவருக்குமான பதிவு இது. என்னுடைய அம்மா கடந்த நான்கு வருடங்களாக கோமா நோயாளியாக இருக்கிறார். வீட்டில் இருக்கும் அவரை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். அவருக்கு தினமும் நாங்கள் PEG குழாய் மூலம் தான் உணவளிக்கிறோம். எங்கள் அம்மா இப்படி ஆனதும் நாங்கள் அனைவரும் உடைந்து போனோம்.

   

சத்யராஜ் மகள் திவ்யா-வா இது? குட்டையாடையில் இப்படியொரு லுக்கில் வெளியிட்ட புகைப்படம்.. - விடுப்பு.கொம்

 

ஆனால் நம்பிக்கை மற்றும் நேர்மறையுடன் மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருக்கிறோம். நாங்கள் அம்மாவை மீட்டெடுப்போம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எங்க அப்பா கடந்த நான்கு வருஷமா சிங்கிள் பேரண்ட்டா தான் இருக்காரு. எங்க அப்பாவின் அம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நானும் என் அப்பாவுக்கு ஒரு அம்மாவாக தான் இருந்தேன். அப்பாவும் நானும் ஒரு சக்தி வாய்ந்த சிங்கிள் மாம்ஸ் கிளப்பை உருவாக்குகிறோம் என்று திவ்யா சத்யராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Divya Sathyaraj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@divya_sathyaraj)