தமிழ் சினிமா பிரபலங்களில் 90களில் வளம் வந்த நடிகை வினிதாவும் ஒருவர். இவருக்கு பெயர் சொல்லும் படியாக பல படங்கள் இருந்தாலும் கட்டபொம்மன் படத்தில் சரத்குமார் உடன் பிரியா பிரியா என்ற பாடலுக்கு ஆடிய இவரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஜூஜூலுப்பா என்று சொன்னதுமே அனைவருக்குமே வினிதா தான் சட்டென்று நினைவுக்கு வருவார். பிரபுவுடன் வியட்நாம் காலனி படத்தில் குறும்புத்தனமாக நடித்து மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்து வைத்திருந்தார். இவருடைய சொந்த ஊர் விசாகப்பட்டினம் பக்கத்தில் உள்ள விஜயநகரம்.

சினிமா பின்புலம் இல்லாத வினிதாவிற்கு முதலில் தெலுங்கு பட வாய்ப்பு வந்துள்ளது. ஒரு படம் நடித்துப் பார்ப்போம் செட் ஆன தொடர்ந்து நடிக்கலாம் இல்லாவிட்டால் படிப்பை தொடரலாம் என்ற முடிவில் தான் திரைக்கு வந்துள்ளதாக பேட்டி ஒன்றில் முன்பு வினிதா கூறியிருந்தார். இன்னும் நிறைய காட்சிகளில் நடிக்க வைத்திருக்கலாம் என்ற பேச்சுக்களும் இருந்தது. அந்த அளவிற்கு இவருடைய முகம் வசீகரத்தை தமிழ் சினிமா கொண்டாடியது என்றே சொல்லலாம்.

தமிழில் வினிதா நடித்த பல படங்கள் அவருக்கு பெயர் சொல்லும் படங்களாகவே அமைந்தது. வினிதா தமிழில் கமிட்டான முதல் திரைப்படம் ஊழியன். இதில் நடிகர் அருண்பாண்டியனுக்கு ஜோடியாக நடித்தார் . இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த கட்டபொம்மன் படம் வெளியாகி வினிதாவுக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. இப்படி சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த வினிதா தன்னுடைய கேரக்டர்களின் நன்றாக ஸ்கோர் செய்திருந்தாலும் அவருடைய நடிப்புத் திறமையை அவருடைய கிளாமரை மறைத்தது என்று சொல்லலாம்.

மேலும் அவர் நடித்த பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் இருந்தார்கள் அவருக்கு சரியான வழிகாட்டல் இல்லாததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு முகத்தை மறைத்தபடி நடந்து வந்தார்ர் வினிதா. இது வினிதாவா? என்று கேட்கும் அளவிற்கு உருவத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயிருந்தார். பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறையினர் கைது செய்து இருந்தார்கள். இதனை அடுத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு எந்த ராசி நல்ல ராசி என்ற படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார் வினிதா.
