FLASE NEWS: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் இருந்து தப்பும் எ.வ.வேலு?… பரபரக்கும் அரசியல் களம்…!

By Visaka on ஆடி 3, 2026

Spread the love

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், தமக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும், அதற்குப் பதிலாக வரும் திங்கள்கிழமை அல்லது மற்றொரு நாளில் நேரில் ஆஜராக அனுமதிக்குமாறும் அவரது தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகக் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.