BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

By Visaka on ஆடி 3, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக ₹5 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், இந்த பிரம்மாண்ட முறைகேட்டில் சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான (CM) விஜய் அவர்கள் உடனடியாக தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்திக் கோரியுள்ளார்.