போடு ரகிட ரகிட…. இனி பத்திரப்பதிவு செய்வோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

Spread the love

விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்துவதற்கும், பல ஆண்டுகள் கழித்து கூடுதல் கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அபெல் மூர்த்தி மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த காசிமாயன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தும் அதிகாரம் மாவட்டப் பதிவாளருக்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.

தங்களின் மனுவில் விவசாயிகள் தரப்பு, தற்காலத்தில் விவசாயத் தொழில் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிலங்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய சூழலில், சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தி பத்திரப்பதிவு செய்வதால், நிலங்களை வாங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும், தமிழக அரசின் பதிவுத்துறை தனது சொந்த ஆதாயத்திற்காக தன்னிச்சையாக இந்த வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது சட்டவிரோதமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்திற்கு, 7 ஆண்டுகள் கழித்து 2025-ம் ஆண்டில் கூடுதல் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிருப்தி வெளியிட்டனர். சொத்துகளுக்கான மதிப்பு வழிகாட்டுதல்களை நிர்ணயிப்பதும், அவற்றை மறுஆய்வு செய்வதும் அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறையாகும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, எந்தவித ஆதாரமும் இன்றி மாவட்டப் பதிவாளர் நிலத்தின் சந்தை மதிப்பைத் தன்னிச்சையாக நிர்ணயம் செய்து பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள சொத்தின் சந்தை மதிப்பை முதன்முறையாக நிர்ணயிப்பதற்கு உரிய குழுவிற்கு மட்டுமே தகுதி இருக்கிறது என்றும், பதிவுத்துறை அதிகாரிகள் தங்களின் வரம்புகளை மீறாமல், சட்ட விதிகளையும் வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தங்களின் உத்தரவில் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

50 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

52 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

58 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

1 மணத்தியாலம் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago