அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவே தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு தமிழ்கூட கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முதல்வர் விஜய் தமக்கு நெருக்கமானவர்களுக்கே அரசு பதவிகளை வாரி வழங்கி வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசியல் ஆலோசகராக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது. மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை அதிகார மையங்களாக மாற்றியிருப்பது என த.வெ.க அரசின் அண்மைக்கால நகர்வுகள் அனைத்தையும் ஆர்.பி. உதயகுமார் அடுக்கிக் காட்டியுள்ளார். மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டு, எட்டு கோடி மக்களின் உரிமைகளுடன் தொடர்புடைய டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியைத் திரைப்படங்களில் வேடம் கொடுப்பது போல முதல்வர் விஜய் தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விமர்சனத்தின் உச்சகட்டமாக, விஜய்யின் திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று ஆர்.பி. உதயகுமார் கொளுத்திப் போட்டுள்ளார். தமக்கு நெருக்கமானவர்களுக்கும், சினிமா நட்புகளுக்கும் அரசுப் பதவிகளை வழங்கி வரும் முதல்வர் விஜய், நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாகத் திகழும் நடிகை த்ரிஷாவை துணை முதல்வராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிவிப்பு வரலாம் என்ற அதிர்ச்சியில் தமிழகம் உறைந்து போயிருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, வெறும் அரசியல் சாடலாகக் கடந்து போகாமல், சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. த.வெ.க அரசின் நிர்வாக முடிவுகளை விமர்சிப்பதற்காக, நடிகை த்ரிஷாவின் பெயரை இழுத்து ஆர்.பி. உதயகுமார் பேசியிருப்பது த.வெ.க தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் அடுத்த சில நாட்களுக்குத் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…
மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…
தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…