இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிக முக்கியமானது. அன்றாடம் இலட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். நடுத்தர மக்களின் பட்ஜெட்டிற்குள்ளாக இரயில் டிக்கெட் இருப்பதால் இந்த பயணத்தை மக்கள் விரும்புவர். ஆனால் ரயில் பயணத்தில் இருக்கக்கூடிய ஒரு சிக்கல் என்றால் அது இருக்கை பிரச்சனை தான். சற்று வயது முதிர்ந்தவர்களுக்கு லோயர் பெர்த் தேவைப்படும். அப்பர் பெர்த் வேண்டாம் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த சீட்டை தேர்வு செய்யும் முறையானது முன்பு இந்திய ரயில்வேயில் கிடையாது.
தற்போது பயணிகளின் சௌகரியமான பயணத்திற்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அப்படி நீங்கள் லோயர் பெர்த் சீட் வேண்டும் என்று நினைத்தால் உங்கள் வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு சௌகரியமாக லோயர் பெர்த் சீட் புக் பெயர் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ரயில்வே வெளியிட்டு இருக்கிற புதிய வழிமுறைகள் மூலம் நீங்கள் புக் செய்து கொள்ளலாம். அதை பற்றி இனி காண்போம்.
மூத்த குடிமக்கள் அல்லது அப்பர் பெர்த் வேண்டாம் என்று நினைப்பவர்கள் டிக்கெட்டை புக் செய்ய ஐஆர்சிடிசி புதிய விதிமுறையை வெளியிட்டு இருக்கிறது. லோயர் பெர்த் என்பது பொதுவாக முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அதாவது பயணிகள் தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே லோயர் பெர்த் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பொது ஒதுக்கீட்டின் கீழ் முன் பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் காலியாக இருக்கும் போது இந்த லோயர் பெர்த் என்பது எளிமையாக கிடைக்கும். இருந்தாலும் அவசர தேவைக்கு நீங்கள் TTE- ஐ லோயர் பெர்த்க்காக அணுகலாம். அவசரமாக தேவைப்படுபவர்கள் சக பயணிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இடத்தை மாற்றிக் கொள்ளலாம்.
குறிப்பாக இந்திய ரயில்வே கூறுவது என்னவென்றால் உங்களது பயணத்தை நீங்கள் திட்டமிட்டு கொள்ளுங்கள். வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் முன்னமே முன் பதிவு செய்து கொள்ளுங்கள். பொது ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் காலியாக இருக்கைகளை தேர்ந்தெடுத்து நீங்கள் செய்தால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.