விஷாலின் இப்போதைய நிலைக்குக் காரணமே அந்த படம்தான்… சில பழக்கங்களுக்கு அவர் அடிமையாகிவிட்டார் – பிரபலம் சொன்ன தகவல்!

By vinoth on தை 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சுந்தர் சி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஷாலை வைத்து மதகஜராஜா என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு  பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் வெளிவரவில்லை. அதற்கு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்தான் காரணம் என சொலல்ப்பட்டது. இந்த திரைப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா மற்றும் சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.

   

இந்த படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். அதன் பின்னர் சில முறை இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஆனால் சில காரணங்களால் ரிலீஸாகவில்லை.  விஷால் கூட இந்த படத்தைத் தானே வெளியிட முடிவு செய்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை.

   

இந்நிலையில் இப்போது இந்த படத்தையே ரசிகர்கள் மறந்து போன நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட விஷால் இளைத்துப் போய் கைநடுக்கத்தோடு காணப்பட்டார். இதனால் அவருக்கு என்ன ஆச்சு என பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் இதுபற்றி பேசும்போது “விஷாலின் தற்போதைய உடல் நிலைக்குக் காரணம் அவன் இவன் படம்தான். அதில் மாறுகண் கொண்டவராக அவர் நடித்த நிலையில் அது காரணமாக அவருக்கு தலைவலி பிரச்சனை வந்தது. அந்த வலியில் இருந்து விடுபட அவர் சில பழக்கங்களுக்கு அடிமையானார்” எனக் கூறியுள்ளார்.