இந்த காலத்தில் நல்லவர்களை விட கெட்டவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். உண்மையை பேசுபவர்களை விட பொய் பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அந்த பொய்யையே உண்மை போல நாடகமாடி பேசுபவர்கள் பலருண்டு. அதுவும் ஒரு கலைதான். அப்படி பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். ஆனால் நாம் நெருக்கமானவர்கள் பொய் பேசுகிறார்கள் என்று தெரிந்தால் அதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் நம் நெருக்கமானவர்கள் பொய்தான் பேசுகிறார்கள் என்பதை பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வது? அதன் வழிகளை பற்றி இனி காண்போம்.
உண்மையை சொல்லுபவர்களை விட பொய் சொல்லுபவருக்கு புத்திசாலித்தனம் தேவை. திருடனும் திருடும்போது தவறு செய்து விடுவான் என்பது போல பொய் பேசும்போது ஒருவர் அதீதமாக நாடகம் ஆடுவார்கள். அப்போது அந்த பொய்யை அடையாளம் கண்டுவிட முடியும். வேறு சில வழிமுறைகளை வைத்தும் அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
அப்படி உங்களுக்கு நெருக்கமானவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள். பொய் பேசுபவர்கள் முன்னமே முடிவு செய்து கதை இதுதான் ஆரம்பம் இதுதான் முடிவு இதுதான் என்று முடிவு செய்து பேசுவார்கள். அதே போல் புதுப்புது விஷயங்களை சேர்த்து பேசுவார்கள். அப்படி நீங்கள் கவனித்தால் அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். மேலும் பொய் சொல்லுபவள் நீங்கள் அவர்கள் நம்புகிறீர்களா இல்லையா என்பதை அறிவதற்காக ஒரு சில கேள்விகளை கேட்பார்கள். அதை வைத்தும் கண்டுபிடித்து விடலாம்.
பொய் சொல்லும் போது சாதாரண நேரத்தை விட அந்த நேரத்தில் வித்தியாசமான உடல் மொழியை காட்டுவார்கள். நீங்கள் இதுவரை அவர்கள் பேசி கேள்விப்படாத வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இதை வைத்து அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
உண்மையை மறைத்து பொய் பேசுபவர்கள் நீங்கள் திருப்பி அவர்களிடம் சந்தேகத்திற்கான கேள்வியை கேட்கும் போது அவர்கள் நேரடியாக பதில் அளிக்க மாட்டார்கள். அவர்கள் சுற்றி வளைத்து பல கதைகளை சொல்லி தான் பதிலுக்கு வருவார்கள். அதே போல உண்மையை பேசுபவர்கள் இயல்பாக பேசுவார்கள். ஆனால் பொய்யர்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவார்கள். அதனால் இந்த மாதிரி வழிமுறைகளை வைத்தும் அவர்கள் கண் அசைவுகளை வைத்தும் உங்களால் நெருக்கமானவர்கள் பொய் சொல்லுகிறார்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்க இயலும்.