நான் PR டீம் வச்சி வந்தேன்… அப்போ சீரியல்ல நடிச்ச நீங்கெல்லாம்..? சரியான பதியடி கொடுத்த சௌந்தர்யா..!

By Soundarya on ஜனவரி 6, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் பத்து போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.

   

தற்போது டிக்கெட் டூ பினாலே தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.  இதில் முதல் போட்டியாளராக ரயான் டிக்கெட் டூ பினாலேவில் நுழைந்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

   

 

இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்ற உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த வாரம் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் இன்று காலை டாஸ்கில் மொத்த போட்டியார்களும் சேர்ந்து சௌந்தர்யாவை டார்கெட் செய்கிறார்கள். அதாவது PR டீம் இருப்பதால் தான் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறாய் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் பதியடி கொடுக்கும் விதமாக பேசிய சௌந்தர்யா, “பிக்பாஸ் பிளாட்பார்ம்ல ஒரு சில பேரு சீரியல்ல நடிச்சிருக்காங்க. பவித்ரா, அருண், ஜாக்குலின் எல்லாருமே சீரியல்ல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு ஏற்கனவே FAN page இருக்கும். அதுவே PR டீம் தானே. நான் PR டீமை Fans-ஆ மக்களா பாக்குறாங்க. என்னதான் pr டீம் இருந்தாலும் மக்கள் ஓட்டு போட்ட தான் முன்னுக்கு வர முடியும்” என்று பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.