முந்தைய காலகட்டத்தில் தலை முடியை விதவிதமாக வெட்டிக்கொள்வது கலர் அடிப்பது ஸ்ட்ரெயிட் ஹேர் வைப்பது போன்றவைகள் எல்லாம் நடிகைகள் தான் செய்து கொண்டிருந்தார்கள். வீட்டில் இருந்த பெண்மணிகள் சாதாரணமாகவே தான் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நடிகைகள் Hair Straitening, Smoothening போன்றவற்றை செய்வது போலவே பல சலூன்களில் செய்கிறார்கள். சாதாரண பெண்மணிகளும் காலேஜ் செல்லும் இளம்பெண்கள் என அனைவரும் Hair Straitening, Smoothening, Keratin, Botox என்ற பலவித சலூன் ட்ரீட்மெண்ட்களை எடுத்துக் கொள்கின்றனர்.
இதுதான் இன்றைய காலகட்டத்தில் டிரண்டாகவும் இருக்கிறது. முடியை அழகு படுத்த வேண்டும் என பல செலவு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற ட்ரீட்மென்ட்கள் எல்லாம் செயற்கையான கெமிக்கல்களால் செய்யகூடியது ஆகும். இதனால் பின் விளைவுகள் ஏற்படுமா என்று கேட்டால் கட்டாயம் ஏற்படும். அதைப்பற்றி தான் இனி காண்போம்.
சமீபத்திய ஆய்வில் இப்படி முடிக்கான சிகிச்சைகள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் எடுத்துக் கொள்ளும் போது அதனால் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த கூந்தல் சம்பந்தமான ட்ரீட்மெண்ட்களை செய்யும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலில் தேங்கி புற்றுநோயை உண்டாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹேர் கலரிங் செய்யும்போது அந்த டையில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை என்று கூறுகிறார்கள்.
இந்த கூந்தலுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் அம்மோனியா மற்றும் பாரபின் இருக்கும். இது சருமத்தின் வழியாக நுழைந்து செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. எப்போதும் இயற்கையான முறையில் கூந்தலை பராமரிப்பது மட்டும்தான் நல்லவைகளாக இருக்கும். இது போன்ற ரசாயனங்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போது கண்டிப்பாக அதன் பின் விளைவுகள் பெரியதாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.