திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தன்னுடைய பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் துரைமுருகன் கடந்த 1938 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதால் 87 வயதை தாண்டியுள்ளார். உடல்நல குறைவுகள் மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் தன்னுடைய கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி துரைமுருகன் ராஜினாமா செய்தால் அவரை சமாதானப்படுத்த அவரது குடும்பத்தினருக்கு சில பதவிகள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அதனை காரணம் காட்டியே பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனை ஈடுகட்டும் வகையில் துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய மருமகள் சங்கீதாவுக்கு துரைமுருகனின் காட்பாடி தொகுதியில் எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது திமுகவில் ஏழு பேர் துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில் இனி ஒன்பது பேர் வரை அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி இருக்கலாம் என்று கட்சி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. துரைமுருகன் விலகிய பிறகு ஜகத் ரட்சகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…