திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்படுகிறார். அவருக்கு இந்த முறை பொது செயலாளர் பதவி கிடையாது. இந்த முறை காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகனுக்கு காட்பாடி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காது என்றும் பரவலாக பேசி வருகிறார்கள். ஆனால் துரைமுருகன் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்த வயதிலும் கட்சிப் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த சில வருட சில நாட்களாக காட்பாடி தொகுதியில் முகாமிட்டுள்ள துரைமுருகன் அந்த தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் பொது க்கூட்டங்களில் கலந்துகொண்டும் பேசி வருகிறார். காட்பாடி தொகுதி எனக்கு கோவில். இந்த தொகுதி மக்கள் தான் என்னுடைய தெய்வம் என்று தொடர்ந்து பேசி வரும் துரைமுருகன் ஒருபோதும் அவர் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டார். காட்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று ஒரு தரப்பினர் சொல்லி வருகிறார்கள். ஆனால் கட்சிப் பதவி பற்றி கவலை இல்லை. காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டுள்ள துரைமுருகன் அங்குள்ள வார்டு செயலாளர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில்தேர்தலில் திமுக வெற்றிக்காக உழைக்க வேண்டும். கட்சிக்காக உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது துரைமுருகன் மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது.
