தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் செய்து பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வளம் வரும் “அனுராதா ராஜ் கிருஷ்ணன்” அவர்கள் தனது துறையில் ஏற்பட்ட சில நல்ல மற்றும் கசப்பான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அனுராதா கிருஷ்ணன் 90 காலகட்டத்தில் இருந்து தற்போது 2024 ஆம் ஆண்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல படங்களில் டப்பிங் செய்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, ஹிந்தி ஆகிய மற்ற மொழி படங்களிலும் டப்பிங் செய்துள்ளார், இவர் ஹஸ்பண்ட் ராஜ் கிருஷ்ணன் அவர்கள் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போதைய படமான சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் படத்தில் சந்தானத்துடன் காமெடி சீனில் இவர் நடித்திருக்கிறார். இவரும் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் தான். தற்போது இவரும் இவர் மனைவி அனுராதா ராஜ் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து ஒரு தனியார் youtube சேனலுக்கு இன்டர்வியூ ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அனுராதா தனது அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ஒரு படத்திற்காக டப்பிங் சென்றுள்ளார்,
அப்பொழுது அங்கு இருக்கும் பட இயக்குனரிடம் அம்மாவைப் பற்றி கூறி கால் வந்தால் சொல்லுங்கள் என்று டப்பிங் சென்டருக்குள் போயிருக்கிறார்கள், டப்பிங் முடிச்சுட்டு வரும்போது கால் வந்துச்சா கேட்டதுக்கு ஒரு மாதிரி தயக்கமா இல்லை என்று சொல்லி இருக்காங்க, அப்போ எல்லாம் பிக்கப் ட்ராப் எல்லாம் படத்தின் குழுவினர் கார் அரேஞ்ச் பண்ணி தந்துருவாங்க, அதனால அவங்க கூட போன, வீட்டுக்கு கிட்ட போனதுக்கு அபுறம் இந்த மாதிரி அம்மா தவறிட்டாங்க அப்படின்னு சொன்னாங்க, எனக்கு அப்ப ரொம்ப ஒரு மாதிரி கஷ்டமாயிடுச்சு, இந்த தொழில் நமக்கு வேணுமா இப்படி அம்மாவை இழந்ததற்கு அப்புறம் கூட அப்படின்னு தோணுச்சு, அப்பொ நான் டைரக்டர் கிட்ட கேட்டேன், ஏன் சார் முன்னாடியே நான் சொன்னல,
அம்மாவுக்கு சீரியஸா இருக்க ஏதாவது நடந்துச்சுன்னா, கால்ல வந்துச்சுன்னா சொல்லுங்கன்னு சொன்னல சார், எதுக்கு சார் சொல்லாம விட்டீங்க அப்படின்னு கேட்டதுக்கு, இல்லம்மா இன்னிக்கு ஒரு நாள் தான் டப்பிங் ஸ்டுடியோக்கு வாடகை கொடுக்க முடியும் இன்னையோட முடியுது, அதுக்குள்ள டப்பிங் வேலையா முடிச்சிட்டோம்னா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு அம்மா விஷயத்தை சொல்லக்கூடாதுன்னு விட்டுட்டேன், சாரிமா அப்படின்னு சிம்பிளா முடிச்சிட்டாரு, நான் அந்த வலியை என்னால மறக்க முடியவில்லை, இதே போல தான் அனுராதாவின் ஹஸ்பண்ட் ஆன ராஜ் கிருஷ்ணன் அவர்கள், தனது அம்மா இறந்து கிடந்த சமயத்தில் தவிர்க்கவே முடியாத ஒரு படப்பிடிப்பிற்கு சென்று அந்த வழியை மறைத்து அப்படத்தில் காமெடி ரோலில் நடித்துக் கொடுத்துவிட்டு அம்மாவின் இறப்பை எடுத்து நடத்தினார், என்று ராஜ் கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். அனுராதாவும் ராஜ்கிருஷ்ணன் அவர்களும் தற்போது இவர்கள் சினிமா துறையில் சந்தித்த பல கசப்பான விஷயங்களை பகிர்ந்து மனம் விட்டு பேசி உள்ளார்கள். இதை கண்ட ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
