இந்த புகைப்படத்தில் தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் பிரபல 90’ஸ் நடிகை யாருன்னு தெரியுதா..?

By Begam on மாசி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் தமிழ்,மலையாளம்,ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொத்தம் 70 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.

#image_title

இயக்குனர் துரை இயக்கத்தில் வெளிவந்த கிளிஞ்சல் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மொழியில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து ரசிகர் கூட்டத்தை வென்றவர். 1982 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் கதாநாயகியாக நடித்து மிக பெரிய வெற்றிப்படமாக குடுத்தார்.

   
   

 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர், வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கினார். இவர் நடிகை மட்டுமின்றி சிறந்த பரத நாட்டிய கலைஞரும் கூட. சொந்தமாக தொழில்கள் தொடங்கி அதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , சமீபத்தில் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்திருந்தார். இப்புகைப்படமானது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.