இந்த உலகில் தாய் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த விலங்குகள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவருக்குமே தாய் பாசம் உள்ளது. ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்வாள். குழந்தைகளுக்காக தன் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டாள். அப்படி தன் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பவள் தாய். அதேபோல ஒரு அம்மாவிற்கு தன் பிள்ளைகள் எங்கிருந்தாலும் தெரிந்து விடும்.
இதற்கு உதாரணமாக நாம் பல நிகழ்வுகளை வீடியோவாக இணையத்தில் பாத்திருப்போம். தற்பொழுது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். கர்நாடக மாநிலம் மாநிலம் , உடுப்பி மாவட்டம் , கண்டபுராவைச் சேர்ந்தவர் ரோஹித்.இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊர் திரும்பிய அவர் , முகத்தை கட்டிக்கொண்டு மார்க்கெட் சென்றார்.
அங்கு மீன் விற்றுக் கொண்டிருந்த அவரது தாயிடம் மீன் விலை குறித்து கேட்கிறார். ஒரு கட்டத்தில் இங்கு நிற்பது தன் மகன் தான் என்பதை அறிந்த தாய் , கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் விடுகிறார். இப்படி தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகனின் இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….