அட கொடுமையே… பெட்ரோல் பங்ககில் நள்ளிரவில் பயங்கரம்… பார்க்கிங் தகராறில் முதியவரை… கொடூரமாகத் தாக்கிய போதை கும்பல்… நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ…!

By Swetha on ஐப்பசி 7, 2026

Spread the love

ஹரித்வாரில் உள்ள செஹ்கல் பெட்ரோல் பங்க் பகுதியில் கார் நிறுத்துவது தொடர்பான ஒரு சிறிய தகராறு, எதிர்பாராதவிதமாகப் பெரும் வன்முறை மோதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள், அங்கிருந்த ஒரு முதிய டாக்ஸி டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுத் தேவையின்றி வம்பு இழுத்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த காரின் சாவியைப் பறிக்க முயன்றதுடன், அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

   

https://twitter.com/rameshofficial0/status/2107541123942265083/video/1

   

இந்த ஒட்டுமொத்த வன்முறைச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் உள்ளூர் காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.