சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குப் பின்னால் இருந்து, எதிரே வரும் பாதையைக் கவனிக்காமல் திடீரென முந்திச் செல்ல முயன்ற வேகன்-ஆர் கார் ஒன்று, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. ஒரு நொடி அவசரத்தால் அரங்கேறிய இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நிற்க வைக்கப்பட்ட வாகனங்களுக்குப் பின்னால் இருந்து பாதையைக் கவனிக்காமல் ஓவர்டேக் செய்யும்போது, எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பதால் இத்தகைய கோர விபத்துகள் நிகழ்கின்றன. ஓட்டுநர்கள் சாலையில் முந்திச் செல்லும் போது கூடுதல் கவனத்துடனும் பொறுமையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என இச்சம்பவத்தின் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
