நள்ளிரவில் பண்ணை வீட்டில் போதை பார்ட்டி… வசமாக சிக்கிய ஆந்திரா MP, தெலுங்கானா MLA… பெரும் பரபரப்பு..!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில், ஆந்திராவைச் சேர்ந்த டிடிபி (TDP) எம்பி புட்டா மகேஷ் குமார் மற்றும் தெலுங்கானாவின் முன்னாள் பிஆர்எஸ் (BRS) எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 14 சனிக்கிழமை நள்ளிரவில், எலைட் ஆக்ஷன் குரூப் ஃபார் டிரக் லா என்போர்ஸ்மென்ட் (EAGLE) குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சோதனையின்போது பண்ணை வீட்டிலிருந்து சுமார் 2 கிராம் கோகைன் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் எம்பி மகேஷ் குமாருக்கு ‘நெகட்டிவ்’ என்று வந்தாலும், பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விரிவான ரத்தப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் பிடிபட்ட நிலையில், ரோஹித் ரெட்டி, மகேஷ் குமார் உட்பட 6 பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிடிபட்டவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த சட்டவிரோத விருந்தில் சிக்கியுள்ளது தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஷாக்கிங் அப்டேட்..! ஆவின் அதிரடி… இப்படி ஒரு முடிவா?… நெய் லிட்டருக்கு இவ்ளோ ஏறிடுச்சா?… தலைசுற்ற வைக்கும் ஆவின் விலை உயர்வு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…

2 minutes ago

உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆறுதல் தேடும் குடும்பம்… இறுதியாக இறங்கி வந்த அரசு… நேரில் சென்று அமைச்சர் கொடுத்த உத்தரவு…!!

கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…

17 minutes ago

ரூ.400 கோடி வசூல் வேட்டை…. மாட்டிய அன்பில் மகேஷ்… மேஜையில் இருந்த 1-வது ஃபைலை தூக்கிய முதலமைச்சர் விஜய்…. அமைச்சர் நிர்மல்குமார் போட்ட குண்டு…..!

தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…

39 minutes ago

ரூ.15 லட்சம் கொடுத்தா தான் சீட்டா?…. தவெக-வில் லீக்கான பகீர் ஆடியோ… குளித்தலையில் நடந்த பரபரப்பு சம்பவம்….!

தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…

43 minutes ago

அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என்.நேரு?… லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி வேட்டை…. திமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…

49 minutes ago

தனுஷுக்கு பின்னால் பாஜக?… டெல்லி ரகசிய சந்திப்பும் ‘காமாட்சி விளக்கு’ சர்ச்சையும்…. கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த தகவல்களும், அவருடைய தற்போதைய நகர்வுகளும் தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.…

52 minutes ago