திருப்புவனம் கோயில் காவலாளியான அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆறாவது நபராக ரவிச்சந்திரனை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள். இவர், முன்னதாக கைது செய்யப்பட்ட காலருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்திருந்தார்.
