தெலங்கானாவில் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராணி (25) என்ற பெண், 5 வருடங்களுக்கு முன்பாக இஸ்லாவத் சந்தோஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவர் கர்ப்பிணியாக உள்ள நிலையில், கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். தாய் இறந்ததை கூட அறியாமல் இருந்த அந்த குழந்தைகளைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
